சூரரைப்போற்று படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் திரைக்கு மிக விரைவில் வரவுள்ள சூரரைப்போற்று படத்திற்கான சென்சார் போர்டு 12 இடங்களில் மியூட் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஆங்காங்கே சில இடங்களில் தரக்குறைவான வார்த்தைகளும், வசனங்களும் வருவதால் இந்த திரைப் படத்திற்கு யு சான்றிதழ் வழங்க முடியாது என சென்சார் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இயக்குனர் சுதாவிடம் சென்சார் தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தியதில், இயக்குனர் தங்களுக்கு யு சான்றிதழ் வேண்டும் அதற்கான விதிமுறைகளை பின்பற்றி கொள்ளலாம் என தெரிவிக்கவே, படத்தில் இருந்து 12 இடங்களில் வசனம் மியூட் செய்யப்பட்டு அதற்கு பின்பு படத்துக்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.