Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி – பீகார் சட்டசபை தேர்தலை ஒத்திவைக்க வலியுறுத்தல் …!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பீகார் சட்டசபை தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என முக்கிய எதிர்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருக்கும் நிலையில் சட்டசபை தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ராஷ்ட்ரீய ஜனதாதளம் லோக் ஜனசப்தி உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. மக்கள் உயிர் ஆபத்தில் இருக்கும் நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்படக் கூடாது என்றும், மக்களின் பாதுகாப்பிற்கு தேர்தல் ஆணையம் உத்தரவாதம் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதேசமயம் உரிய காலத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டால் வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அரசியல் கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டன.

Categories

Tech |