Categories
இந்திய சினிமா சினிமா

உலகநாயகனின் 61 ஆண்டு திரையுலக பயணம்…குவியும் பிரபலங்கள் வாழ்த்து…!


கமல்ஹாசனின் திரையுலக வாழ்வில் 61 ஆண்டுகள் நிறைவடைந்ததால் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

திரையுலகிற்கு வந்து 61 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார் கமலஹாசன். களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக 1959 ஆம் ஆண்டு அறிமுகமாகி பின்னர் நடனக்கலைஞர், கதாநாயகன், கதை வசனகர்த்தா, பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் பல திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார். அரசியல் கட்சியின் தலைவராகவும் தற்போது திகழ்கிறார். இவர் 61 ஆண்டுகள் சினிமா பயணத்தை சமூக வலைத்தளத்தில் ஹேஸ்டேக்கில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பல திரையுலக பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இவரை வைத்து 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், டிக் டிக் டிக் போன்ற படங்களை இயக்கிய பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ” இந்திய திரையுலகில் அரை நூற்றாண்டுக்கு மேல் கடந்து பல்வேறு தொழில்நுட்பங்கள், பலநூறு கதாபாத்திரங்கள் என உடலை வருத்தி உச்சம் தொட்ட உலகநாயகனுக்கு என் வாழ்த்துக்கள் ” என பதிவிட்டுள்ளார். நடிகை காஜல் அகர்வால்” உலகநாயகனின் சாதனை அளப்பரியது. வாழ்த்துக்கள்” எனக் கூறியுள்ளார். நடிகை பார்வதி” உலகநாயகனின் 61 ஆண்டு சினிமா சாதனையை கொண்டாடுவோம்” என பதிவிட்டுள்ளார். இயக்குனர் கார்த்திக் நரேன், லோகேஷ் கனகராஜ், நடிகர் மனோஜ், பாடலாசிரியர் விவேக் உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |