Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

தனியார் கல்குவாரிகளால் கிராமமே பாதிப்பு – வீடுகள் இடிந்து விழும் நிலை…!!

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே தனியார் கல் குவாரிகளால் ஒரு கிராமத்தில் இருக்கும் வீடுகள் அனைத்தும் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

மதுராந்தகம் தாலுக்கா விராலூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாகாமலை கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களின் பிரதான தொழில் விவசாயமாக உள்ளது. இப் பகுதியில் பல ஆண்டுகளாக இயங்கிவரும் தனியார் கல் குவாரிகளால் பொது மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இங்குள்ள தனியார் கல்குவாரிகள் 400 அடிக்கும் ஆழமாக பள்ளம் எடுத்து செயல்பட்டு வருகின்றன.

மேலும் குவாரியில் தினம்தோறும் வைக்கப்பட்டும் வெடிகளால் இங்குள்ள பகுதி வாசிகளின் வீடுகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. பல வீடுகள் விரிசல் விட்டு முற்றிலும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. அதோடு மட்டுமல்லாமல் இங்குள்ள விவசாய நிலங்களுக்கு குவாரிகளால் பாசன நீரும்  கிடைக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தகுந்த நடவடிக்கை எடுத்து, தனியார் குவாரிகளை கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Categories

Tech |