Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

போலீஸ்காரர்களுக்கு நற்செய்தி : “வாரம் ஒருமுறை ஊக்கத்தொகை” வெளியான அறிவிப்பு….!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளுக்கு வாரம் ஒருமுறை ஊக்கத்தொகை வழங்கப்படும் என அம்மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுடன் சேர்ந்து காவல்துறை நண்பர்களும் தங்களது உயிரை அர்ப்பணித்து பொது மக்களுக்காகத் தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். இவர்களை ஊக்கமளிக்கும் விதமாக,

திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றும் காவலர்களுக்கு வாரம் ஒருமுறை ஊக்கத்தொகை வழங்கப்படும் என எஸ்பி விஜயகுமார் அறிவித்துள்ளார். அதன்படி, தேர்வு செய்யப்படும் காவலர்களுக்கு வாரத்தின் சிறந்த காவலர் என்ற பாராட்டு பத்திரத்துடன், ரூபாய் 500 ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Categories

Tech |