கேரள தங்கம் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷின் ஜாமின் மனுவை பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திருவனந்தபுரத்திலுள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் வந்த பார்சலில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையும், அமலாக்கத் துறையும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா, சுரேஷ், சரித், சந்திப்நாயர் மற்றும் பைசல்பேரத் ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஸ்வப்னா ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு இன்று பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் தலைமை நீதிதுறை நீதிபதி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே என். ஐ கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.