Categories
சினிமா தமிழ் சினிமா

சுந்தர் சி யின் அடுத்த புகைப்படம்… அவர் எடுத்த அதிரடி முடிவு…!

நடிகரும் இயக்குனருமான சுந்தர் சி அரண்மனை 3 படத்தின் படப்பிடிப்பை தற்போதைய நிலை சீரானதும் தொடங்க திட்டமிட்டுள்ளார்.

 

சுந்தர் சி இயக்கிய “அரண்மனை” பேய் படம் இரண்டு பாகங்கள் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய நிலையில் தற்போது அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை தயாராக உள்ளது. அரண்மனையின் இரண்டு பாகங்களையும் இயக்கிய சுந்தர் சி தான் இந்த படத்தையும் இயக்க உள்ளார். நடிகர் ஆர்யா கதாநாயகனாகவும் அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்க்ஷி அகர்வால் ஆகிய நடிக்கின்றனர். இப்படத்தின் காமெடி வேடங்களில் விவேக் மற்றும் யோகிபாபு நடிக்கின்றனர்.

சத்யா இப்படத்திற்கு இசையமைக்கிறார். குஜராத் மாநிலத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஊரடங்கும் அரசு அனுமதித்தாலும் ஆயிரம் பேரை ஒரே இடத்தில் ஒன்றுகூட்டி படப்பிடிப்பு நடத்த முடியாது என்பதால் இந்த நிலை சீராகும் வரை படத்தை தள்ளி வைக்க சுந்தர்சி திட்டமிட்டுள்ளார். மேலும் லாக்டோன் சமயத்தில் குறைவான கதாபாத்திரங்களை வைத்து அடுத்த படத்திற்காக கதையை தயார் செய்துள்ளாராம். தளர்வு அறிவிக்கப்பட்டாலும் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பை தான் முதலில் துவங்க இருக்கிறாராம் சுந்தர் சி.

Categories

Tech |