Categories
தேசிய செய்திகள்

“நீட் தேர்வு ஆன்லைன்லில் நடத்த முடியாது”… தேசிய தேர்வு முகமை பதில் மனு ..!!

நீட் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த முடியாது என்று தேசிய தேர்வு முகமை உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

வருகின்ற செப்டம்பர் மாதம் தேதி நடைபெற இருக்கும் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதனை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த ஏற்பாடு செய்ய முடியுமா? அல்லது வளைகுடா நாடுகளில் தேர்வு மையங்களை அமைக்க முடியுமா?என கேட்டு மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதற்கு பதிலளித்துள்ள தேசிய தேர்வு முகமை, “ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த இந்திய மருத்துவ கவுன்சில் மறுத்துவிட்டது.

தரவுகளின் அடிப்படையில் வளைகுடா நாடுகள் மற்றும் சிங்கப்பூர், மலேசியா போன்ற மற்ற பிற நாடுகளில் உள்ள மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். ஆனால், ஒவ்வொரு நாடுகளிலும் தேர்வு மையங்களை அமைக்க முடியாது” என்றும் கூறியுள்ளது. மேலும், வந்தே பாரத் திட்டத்தின் மூலம் போதிய விமானங்களை இயக்கி வருவதால் மாணவர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது. தேர்வுக்குத் தயாராக மாணவர்களுக்கு தேவையான அவகாசம் கொடுத்து இருப்பதால்  தேர்வை ஒத்திவைக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய என்டிஏ பதில் மனுவில் கூறியுள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.

Categories

Tech |