நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க இந்த வருடத்தின் இறுதி வரை அரசு உதவி செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது
சுவிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு உதவி புரியும் அரசு இந்த வருடத்தின் இறுதி வரை தொடர்ந்து உதவும் என தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றினால் பொருளாதார ரீதியாக பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தடைப்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் அரசே ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க உதவும் என அறிவித்தது.
தற்போது அந்த திட்டத்தின்படி இந்த வருடம் முடியும் வரை அரசின் உதவி நிறுவனங்களுக்கு தொடரும், அதோடு அந்த நிதி 14 மில்லியன் சுவிஸ் பிராங்குகளாக அதிகரிக்கப்பட்டது. மேலும் அளவுக்கு அதிகமான செலவுகள் நிறுவனங்களின் மீது சுமத்தப்படாது என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது சுவிஸ் நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்பால் வேலை இல்லா திண்டாட்டமும் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.