பெரம்பலூர் மாவட்டத்தில் காரில் அபின் கடத்தியதாக பாஜக மாநில நிர்வாகி உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி பெரம்பலூர் மாவட்டங்களில் போதைப் பொருளான அபின் கார் மூலம் கடத்தப்படுவதாக போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் ஒருங்கிணைந்த குற்ற தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் சென்னை நெடுஞ்சாலையில் காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது பெரம்பலூரில் கார் ஒன்றில் அபின் மறைத்து வைக்கப்பட்டு கடத்தப்படுவது தெரிய வந்தது.
விசாரணையில் இச்செயலில் ஈடுபட்டது, பெரம்பலூர் பாஜக மாவட்ட துணைத்தலைவர் லுவாங்கோ அடைக்கலராஜ் என்பது தெரியவந்தது. இதனையடுத்து பாஜக நிர்வாகி உள்ளிட்ட 5 பேரை கைது செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து அபின் கடத்தி வரப்பட்டதும், இதன் சர்வதேச சந்தை மதிப்பு 15 லட்சம் ரூபாய் என்பதும் தெரியவந்துள்ளது.