Categories
மாநில செய்திகள்

“10ஆம் வகுப்பு முடிவு” 5,177 மாணவர்கள் பாதிப்பு…. உடனே விசாரணை நடத்துங்க…. பள்ளி கல்வித்துறை உத்தரவு…!!

தமிழகத்தின் பத்தாம் வகுப்பு தேர்வுகளின் முடிவுகளில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி அது குறித்து விசாரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது .

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு தான் சரியான தீர்வு என்பதால், 6 கட்டமாக ஊரடங்கு ஜூலை 31-ஆம் தேதி வரை கடுமையாக பின்பற்றப்பட்டு வந்தது. இதன் காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு,

அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி எனக்கூறிவிட்டு, தேர்ச்சி அடைந்தவர்கள் எண்ணிக்கைக்கும், தேர்வு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கைக்கும் இடையில் 5,177 மாணவர்கள் விடுபட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி, விசாரணை நடத்த பள்ளிக்கல்வித் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 

Categories

Tech |