Categories
காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மும்பை டு சென்னை… 115 நாட்கள்… சிகிச்சைக்காக மேற்கொண்ட நடைபயணம்….!!

மும்பையில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஒருவர் சென்னைக்கு சுமார் 115 கிலோ மீட்டர் நடந்தே வந்துள்ளார்.

பரந்தாமன் என்பவர் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர். மும்பையில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் இவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு சொரியாசிஸ் நோய் இருப்பதால் சென்னையில் உள்ள கே.எம்.சி அரசு மருத்துவமனைக்கு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வந்து மாத்திரைகள் வாங்கிக்கொண்டு மீண்டும் மும்பை சென்றுவிடுவார். தற்போது கொரோனா ஊரடங்கால் மருந்துகளை வாங்க அவரால் சென்னைக்கு வர இயலவில்லை. இதற்கிடையில் சொரியாசிஸ் நோயின் தாக்கம் அவருக்கு அதிகரித்துள்ளது.

 

இதனால் வேறு வழி இல்லாமல் 115 நாட்கள் 1306 கிலோமீட்டர் தூரம் மும்பையிலிருந்து நடந்தே வந்துள்ளார். திருவள்ளுவர் மாவட்டம் கும்மிடிபூண்டி பேருந்து நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். இந்த தகவலை அறிந்த கும்மிடிப்பூண்டி துணை காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் வட்டார மருத்துவ அலுவலர் களிடம் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அதன்படி அவரின் வேண்டுகோளுக்கிணங்க வட்டார மருத்துவ அலுவலர் கோவிந்தராஜை ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கே எம் சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனித நேயத்துடன் செயல்பட்ட துணை ஆய்வாளர், வட்டார மருத்துவ அலுவலர் கோவிந்தராஜ் ஆகியோர் பல்வேறு தரப்பினரால் பாராட்டுகளை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |