புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தையை கட்டைப்பையில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம் ஆறடிகொள்ளை என்ற கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், நேற்று இரவு ஒரு கட்டைப்பை கிடந்துள்ளது. குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டதால், அவ்வழியாக வந்தவர்கள் பையை திறந்து பார்த்த போது ஆண் குழந்தை ஓன்றுபையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கீரமங்கலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீரமங்கலம் போலிசார் குழந்தையை கைப்பற்றி சமூகநலத் துறை அதிகாரிகளிடம் குழந்தையை பத்திரமாக ஒப்படைத்தனர். மேலும் குழந்தையை விட்டுச் சென்றது யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.