Categories
உலக செய்திகள்

பயங்கரவாதிகளின் அத்துமீறிய தாக்குதல்… அப்பாவி மக்கள் 13 பேர் பலி…!!!

நைஜீரியாவில் கிராமத்துக்குள் புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். அதுமட்டுமன்றி காவல்துறையினர் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்தும்  அப்பாவி பழங்குடி இன மக்களை குறிவைத்தும்  பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டின் வட மத்திய மாகாணமான பியூனேவில் பழங்குடியின மக்கள் வசிக்கின்ற ஒரு கிராமத்தில் புகுந்த பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளனர். பெண்கள் குழந்தைகள் என்ற பாகுபாடு இன்று கண்ணில் பட்டவர்களை எல்லாம் குருவி சுடுவது போன்று கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளினர். மேலும் அங்கிருந்த வீடுகளுக்கும் தீ வைத்துள்ளனர்.

பயங்கரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலில் 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர். அதுமட்டுமன்றி கிராம மக்கள் பலரை பயங்கரவாதிகள் தங்களின் துப்பாக்கி முனையில் மிரட்டி கடத்தி சென்றுள்ளனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. ஆனால் போகோஹரம் பயங்கரவாதிகளை இந்த தாக்குதலை நடத்தி இருப்பார்கள் என்ற நைஜீரிய அரசு கூறியுள்ளது. இந்த தாக்குதல் நடந்த கிராமத்தில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு தப்பிச்சென்ற பயங்கரவாதிகளை தேடும் பணி மிக தீவிரமாக நடந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |