தமிழகத்தில் இ பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி,
பிற மாவட்டங்களுக்கு மாநிலங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டும் எனில் இ பாஸ் நடைமுறை கட்டாயமாக மீண்டும் பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் படும் சிரமத்தை கருத்தில் கொண்டு இ பாஸ் முறையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். பலர் மிக மிக அவசியமான தேவைகளுக்கு கூட இ பாஸ் கிடைக்காமல் அவதிக்குள்ளாகிறார்கள் என்றும், இந்தியாவில் மற்ற எந்த மாநிலத்திலும் இ பாஸ் நடைமுறை கிடையாது எனவும் கூறியுள்ளார்.