Categories
உலக செய்திகள்

35.1 மில்லியன் யூரோக்களுக்கு வீடு வாங்கிய கோடீஸ்வரர்… சுத்தம் செய்யும் போது கண்ட அதிர்ச்சி..!!

35.1 மில்லியன் யூரோ கொடுத்து வாங்கிய பிரம்மாண்ட வீட்டின் அருகே அழுகிய நிலையில் சடலம் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரிசில் பிரான்ஸ் பிரதமரின் வீட்டின் அருகே இருக்கும் கட்டிடம் ஒன்றை செல்வந்தர் ஒருவர் வாங்கி அதனை சுத்தம் செய்வதற்காக பணியாளர்களை அனுப்பியுள்ளார். கட்டிடத்தை சுத்தம் செய்வதற்கான பணி நடந்து கொண்டிருந்த சமயம் அங்கு அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் காவல் துறையினருக்கு  உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து காவல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் பல தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.

அழுகிய நிலையில் கிடந்த அவரின் பெயர் ரெனால்ட் என்பது தெரியவந்தது.   அவர் முப்பது வருடங்களுக்கு முன்பே உயிரிழந்துவிட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ரெனால்டு மது போதைக்கு அடிமையானவர் என்பதும் அவரது எலும்புகள்  உடைந்திருந்ததும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து  அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல் அதிகாரிகள் முடிவு செய்தனர். அதோடு விசாரணையும் தொடங்கினர்கள்.

ஆனால் அந்தக் கொலை சம்பவம் நடந்து 30 வருடங்கள் முடிந்து விட்டதால் கொலையாளி உயிரோடு இருப்பாரா என்ற சந்தேகமும் காவல் அதிகாரிகளுக்கு எழுந்துள்ளது. இந்நிலையில் அழுகிய நிலையில் சடலமொன்று தங்கள் வீடுகளுக்கு அருகே பல வருடங்களாக கிடந்தது அப்பகுதி மக்களுக்கு தெரிய வந்ததையடுத்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 35.1 மில்லியன் யூரோக்கள் கொடுத்து பிரம்மாண்டமான வீட்டை வாங்கிய ஜின் இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை

Categories

Tech |