Categories
தேசிய செய்திகள்

“அறிவிப்பு வந்தால் மட்டுமே ரயில்கள் இயக்கப்படும்”… ரயில்வே துறை அமைச்சகம் அறிவிப்பு…!!

நாடு முழுவதும் அடுத்த அறிவிப்பு வரும்வரை பயணிகள் ரயில் இயக்கப்படமாட்டாது என இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ்  நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், கொரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியில் ஒரு பகுதியாக மார்ச் மாதம் முதல் ரயில்சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊரில் அழைத்துக்கொண்டு சேர்க்கும் சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் இடையில், ஒரு சில வாரங்களுக்கு குறைந்த அளவில் ரயில்கள் இயக்கப்பட்டன. அதன் பின் கொரோனா பாதிப்பு தீவிரமானதை  தொடர்ந்து மீண்டும் ரயில்சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டது.

தற்போது, ஆகஸ்ட் 12 வரை ரயில்சேவை நிறுத்திவைக்கப்பட்டு இருப்பதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ள நிலையில், அடுத்த அறிவிப்பு வரும் வரை ரயில்சேவை நிறுத்தி வைக்கப்படும் என இந்திய ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதே சமயத்தில் தற்போது செயல்பாட்டில் இயங்கும் 230 ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என்றும் விளக்கம் கொடுத்துள்ளது. அதேபோல, குறைந்த அளவு மும்பையில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் தொடர்ந்து இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |