இளைஞன் ஒருவன் இரண்டு இளம்பெண்களைக் கொடுமைப்படுத்தி கொலை செய்ததோடு ஃப்ரீசரில் அடைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
லண்டனை சேர்ந்த யூனுஸ் என்பவர் காணாமல் போய்விட்டார் என அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து அவரது வீட்டில் காவல்துறையினர் சோதனையிட சென்று இருந்தனர். அப்போது அங்கிருந்த ஃப்ரீசர் ஒன்றில் அதிக அளவு ஈ மொய்ப்பதை பார்த்த காவல்துறையினருக்கு வீட்டில் வேறு ஏதோ ஒரு பிரச்சினை இருப்பதாக தோன்றியுள்ளது இதனை தொடர்ந்து காவல் அதிகாரிகள் ஃப்ரீஸரின் பூட்டை உடைத்து திறந்து பார்த்தபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த சிறிய ஃப்ரீசரில் உயிரற்ற இரண்டு இளம் பெண்களின் சடலம் திணித்து வைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் யூனுஸை தீவிரமாக தேட தொடங்கினர்.
வீட்டில் மின்சாரம் தடைபட்ட காரணத்தினால் ஃப்ரீசர் வேலை செய்யாமல் அதிலிருந்த சடலங்கள் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதனால் யூனுஸ் அதே பகுதியில் இருக்கும் வேறொரு வீட்டில் தங்கி இருந்துள்ளார். இதனை அறிந்த காவல்துறையினர் உடனடியாக அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. யாருமில்லை என்று தன்னை நாடிவந்த ஹென்றிக் மற்றும் முஸ்டாஃபா என்ற இரண்டு இளம் பெண்களை கொடூரமாக கொலை செய்த யூனுஸ் தனது வீட்டிலேயே ஃப்ரீசரில் அடைத்து வைத்துள்ளான். இச்சம்பவத்திற்கு முன்பு தனது காதலியையும் அடைத்து வைத்து கொடுமைப் படுத்தியுள்ளான்.
பின்னர் 14 வயது சிறுமி ஒருவரை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டு அந்த சிறுமிக்கும் பல கொடுஞ் செயல்களை செய்துள்ளான். அதோடு வேறு ஒரு 17 வயது சிறுமியுடன் பழகி அவளையும் கடுமையாக கொடுமைப் படுத்தியுள்ளான். கடைசியாக ஹென்றிக் மற்றும் முஸ்டாஃபா என்ற பெண்களை கொடுமை செய்து கொலை செய்த குற்றத்தில் தற்செயலாக யூனுஸ் சிக்கியுள்ளார். ஒரு முறை தான் சரணடையப் போவதாக தனது சகோதரன் வீட்டிற்கு சென்றபோது கூறியிருக்கிறான். ஆனால் இதுவரை தான் செய்த கொலையை அவன் ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் பல கொடுமைகளைச் செய்த அவனிடம் விசாரணை தொடர்ந்து வருகிறது.