Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜகவுக்கு ஆதரவு ? மணிப்பூரில்6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா …!!

மணிப்பூர் சட்டசபையில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக  காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அவையை புறக்கணித்தனர்.

மணிப்பூர் சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்கப்பட்ட நிலையில் என் பிரேன் சிங் கட்சி வெற்றி பெற்றது. வாக்கெடுப்பின் போது காங்கிரஸ் உறுப்பினர்கள் அரசை எதிர்த்து வாக்களிக்கலாம் என்று கொறடா உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் உத்தரவை மீறி சட்டசபையை புறக்கணித்தனர். புறக்கணித்த 6 எம்.எல்.ஏக்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் இதுவரை ராஜினாமா ஏற்கப்படவில்லை.  காங்கிரஸ் மெஜாரிட்டியான கட்சியாக இருந்தும் ஆட்சி அமைக்க தோல்வியடைந்து விட்டதாக மாநில காங்கிரஸ் தலைவர் இபோபி சிங் மீது  குற்றம்சாட்டினார்.

முன்னதாக, மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2017ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் பாஜகவுக்கு 21 இடங்கள் மட்டுமே கிடைத்தன. தேசிய கட்சிகள் மற்றும் பிற கட்சி எம்.எல்.ஏக்களின் ஆதரவோடும் பாஜக ஆட்சி அமைத்தது. இதனால் மக்கள் கட்சியை சேர்ந்த பிரேன் சிங் மந்திரியாக உள்ளார். இந்நிலையில் பாஜகவை சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் காங்கிரசில் சேர்ந்தனர். தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களும், ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ திரிணாமுல் காங்கிரஸும் அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றது .

இதனால் தேசிய மக்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் டெல்லி சென்று உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்து பேசிய பின் தங்களது முடிவை திரும்பப் பெறுவதாகவும், அரசுக்கு ஆதரவு அளிப்பதாகவும் கூறினார். இதன்படி அம்மாநில சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு குரல் வாக்கெடுப்பின் மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரேன் சிங் பெரும்பான்மையை நிரூபித்தார். இதனால் மணிப்பூரில் நடத்த  அரசியல் பரபரப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது .

Categories

Tech |