சுஷாந்த் மரணம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ரியா மீதான விசாரணைக்கு தடை இல்லை என தெரிவித்துள்ளது.
மும்பையில் உள்ள தனது வீட்டில் பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து அவரது தற்கொலை தொடர்பான வழக்கை போலீஸ் விசாரணை செய்து வருகிறது. அதேபோல் அவரது காதலியான ரியா மீது சுஷாந்த் சிங்கின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுஷாந்த் சிங்கின் காதலி ரியா, சகோதரர் சோவிக், தந்தை இந்திரஜித், அவரது மேலாளர் சாமுவேல் மிராண்டா, ஸ்ருதி மோடி உள்ளிட்ட 6 பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டுதல், நம்பிக்கை மோசடி மற்றும் திருட்டு போன்ற பிரிவுகளில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையில் நடிகை ரியாவுக்கு எதிராக வழக்கு விசாரணைக்கு தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தற்கொலைக்கு தூண்டுதலாக பீகாரில் நடைபெற்றுவரும் விசாரணைக்கும் தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததோடு ரியா மீதான குற்றச்சாட்டை கடுமையாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.