கலைஞர் மீது அதிமுகவிற்கு திடீர்பாசம் என வைகோ அவர்கள்க கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுதியுள்ளது.
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
மக்களவைத் தேர்தலில் மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் அப்பகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட உள்ள மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தியை ஆதரித்து பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வந்தார் இதனையடுத்து பிரச்சார பயணத்தில் அவர்பேசியதாவது,
மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் என்பது நிச்சயம் வேண்டும் மத்தியில் இருக்கக்கூடிய அரசானது அதிக அளவில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது மத்தியில் உள்ள சிறு சில கூட்டங்கள் நமக்கு சுதந்திரம் வாங்கித்தந்த மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவுக்கு நாடு முழுவதும் சிலை வைக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகிறது அதனை எதிர்த்து மத்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்தபாடில்லை ஆகவே இந்த மத்திய அரசு ஒழிக்கப்படவேண்டும் வேண்டும் என்று பிரச்சாரப் பயணத்தின் பேசினார்
அதன் பின்பு திடீரென அதிமுக அரசிற்கு கலைஞர் மீது தற்பொழுது அக்கறை வந்துள்ளதுஎப்பொழுதும் இல்லாதஅக்கறை இப்பொழுது ஏன் வருகிறது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார் , மேலும் கலைஞர் உயிருடன் இருந்தபோது மோடி உட்பட அனைவரும் வந்து பார்த்து சென்றனர் ஆனால் அப்போதெல்லாம் வராத அக்கறை இப்பொழுது வந்தது ஏன் என்றும், கலைஞர் அவர்கள் இறந்த பிறகு அவருக்கு மெரினாவில் இடம் கேட்டு வந்த பொழுது கலைஞருக்கு மெரினாவில் இடம் தர மறுத்த கயவர்கள் நீங்கள் தற்போது கலைஞர் மீது பாசம் காட்டுவது ஏன் என்று குற்றம் சாட்டினார்
ஆரம்பத்திலிருந்தே கலைஞரை பிடிக்காத அதிமுகவினர் தற்பொழுது காட்டுவது பாசம் வேசமா என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.