டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்வதற்கு மின்னணு இயந்திரங்கள் வாயிலாக வாடிக்கையாளர்களிடம் தொகையை பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
சென்னையில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் ஆர் கிலொஷ்குமார் வெளியிட்ட செய்தியில் தமிழக மாநில வாணிபக் கழகம் சார்பில் 5330 மதுபான கடைகள் தமிழகத்தில் உள்ளன. மதுபான கடைகளிலும் மின்னணு விற்பனை எந்திரங்கள் நிறுவுவதற்காக 7 வங்கிகள் கலந்து கொண்டன. அதில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மற்ற வங்கிகளை விட ஒப்பந்தப்புள்ளி தொகையை குறைவாக குறிப்பிட்டு இயந்திரங்கள் நிறுவுவதற்கு தேர்வாகியுள்ளது. டாஸ்மார்க் குழுமம், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள அனுமதி வழங்கியுள்ளது.
மின்னணு விற்பனை இயந்திரங்கள் வாயிலாக டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்கும் வாடிக்கையாளர்கள் அதற்கான தொகையை யு.பி.ஐ.கியூ ஆர் கோட், டெபிட் கார்டு, கிரெடிட் கார்ட், இன்டர்நேஷனல் கார்டு, மூலம் செலுத்தலாம். இரண்டு மாதங்களில் இதற்கான பணிகள் நிறைவடையும் என டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் கூறியுள்ளார். சென்னை ஐகோர்ட்டில் கடந்த மே மாதம் அளித்த தீர்ப்பில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனைக்கு மின்னணு இயந்திரம் செயல்படுத்த வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்புக்கு இணங்க மின்னணு விற்பனை வாயிலாக அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபான விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.