Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தயாரிப்பாளர் கொரோனாவால் உயிரிழப்பு… திரையுலகினர் இரங்கல் ….!!

பிரபல தயாரிப்பாளர் சுவாமிநாதன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் கே முரளிதரன் ஜி வேணுகோபால் இவர்களுடன் இணைந்து அரண்மனை காவலன், வேலுச்சாமி, மிஸ்டர் மெட்ராஸ், கோகுலத்தில் சீதை, தர்மசக்கரம், பகவதி, உன்னை நினைத்து, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வீரம் வெளஞ்ச மண்ணு, பிரியமுடன், உன்னருகே நானிருந்தால், உனக்காக எல்லாம் உனக்காக, உன்னை தேடி, இது போன்று பல படங்களை தயாரித்து வந்தவர் சுவாமிநாதன். மேலும் இவர் சில படங்களில் சிறு வேடங்களில் நடித்தும் உள்ளார்.

இந்தநிலையில் சுவாமிநாதனுக்கு சில தினங்களுக்கு முன்னால் கொரோனா  நோய்த்தொற்று ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன் பின் இன்று சிகிச்சை பலனில்லாமல் அவர் உயிரிழந்துள்ளார். தயாரிப்பாளர் சுவாமிநாதனின் மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தயாரிப்பாளர் சுவாமிநாதனின் மகன் அஸ்வின் பாஸ் என்ற பாஸ்கரன் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி கும்கி படம் மூலம் பிரபலமாகியுள்ளார். அதன்பின் அஸ்வின் ஏராளமான படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில்தான் அஸ்வினுக்கு திருமணம் நடந்தது.

Categories

Tech |