சட்டமன்ற சட்டமன்ற தேர்தலுக்கு பின் எம்எல்ஏக்கள் ஓன்று கூடி அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பார்கள் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சிக்கு உட்பட்ட கண்மாய் பகுதியில் ரூபாய் 90 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பணிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு நேரில் சென்று ஆய்வு செய்தார்.. அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்..
அப்போது அவர் கூறுகையில், சட்டமன்ற சட்டமன்ற தேர்தலுக்கு பின் எம்எல்ஏக்கள் ஓன்று கூடி அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பார்கள்.. ஆனாலும் ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையில் அதிமுக செயல்படும் என்றார். மேலும் திமுகவில் இருந்து யார் அதிமுகவுக்கு வந்தாலும் வரவேற்போம்.. சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுக புயல் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது என்று கூறினார்.
திமுகவின் முதல்வர் வேட்பாளர் ஈபிஎஸ் தான் என தொண்டர்கள் எதிர்பார்த்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடி யாரை தேர்வு செய்கிறார்களோ அவரே அடுத்த முதல்வர் என அமைச்சர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..