Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தக்காளி தோட்டத்திற்குள் யானைகள் புகுந்து அட்டகாசம் – விவசாயிகள் வேதனை

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனி கோட்டை அருகே தக்காளி தோட்டத்திற்குள் யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனப்பகுதியில் உலாவிக் கொண்டிருந்த யானைகள் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள உளிச்செட்டி பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து தக்காளி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை மிதித்து நாசம் செய்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளது. இதில் ஐயூர் கிராமத்தில் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது ஒன்றரை ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்திருந்த தக்காளி பயிர்கள் முற்றிலும் நாசமானது.

அறுவடைக்கு தயாராக இருந்த பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தக்காளிகள் அனைத்தும் சேதமடைந்துள்ளதால் அவர் மிகுந்த வேதனை அடைந்துள்ளார். மேலும் ஐயூர் வனப்பகுதியில் பத்திற்கும் மேற்பட்ட யானைகள் சுற்றித்திரிவதால் மேலூர், குள்ளட்டி, தொழுவ பேட்டா,  தொட்டிக்குப்பம் ஆகிய வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறை எச்சரித்துள்ளது.

Categories

Tech |