Categories
சினிமா தமிழ் சினிமா

சரவணன் இயக்கத்தில் திரிஷா…. கதை எழுதும் ஏ.ஆர்.முருகதாஸ்…!!!!

‘எங்கேயும் எப்போதும்‘ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சரவணன். இதை தொடர்ந்து இவன் வேறமாதிரி, வலியவன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். மேலும் கன்னடத்தில் சக்ரவியூகா என்ற படத்தை இயக்கினார். இதனிடையே ஒரு விபத்தின் காரணமாக சில காலம் ஓய்வில் இருந்தார். தற்போது மீண்டும் பணிக்கு திரும்பி விட்டார். இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆக்‌ஷன் படமாக சரவணன் இயக்கவுள்ளார்.

Image result for a.r. murugadoss

மேலும் இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். திரிஷாவுடன் இணைந்து நடிக்கும் துணை நடிகர்களை தேர்வு செய்து வருகின்றது. இந்தப்படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்‌ஷன் படமாக உருவாக இருக்கிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க இருக்கும் இந்த படத்தின் கதையை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை சரவணன் இயக்கவுள்ளார், இவர் ஏ.ஆர்.முருகதாஸிடம் துணை இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |