குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கடற்கரை பகுதி மக்களை பாதுகாப்பாக இருக்க கூறி வானிலை ஆய்வு மையம் வலியுறுத்தியுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த கனமழையால் நீலகிரி பகுதியைச் சேர்ந்த மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதேபோல் நமது அண்டை மாநிலமான கேரளத்திலும் பல்வேறு பேரிடர்கள் கனமழையால் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை நீலகிரியில் இடியுடன் கூடிய மழையும், கன்னியாகுமரியில் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதால் கடற்கரை பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.