சமீபத்தில் வெடி விபத்து நிகழ்ந்த லெபனான் தற்போது கலவர பூமியாக மாறியுள்ள புகைப்பட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக வருகின்றன.
சில தினங்களுக்கு முன்பாக லெபனானின் பெய்ரூட் துறைமுகத்தில் வெடிவிபத்து நிகழ்ந்த சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடி விபத்திற்கு பல நாட்டவர்களும் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வரும் சூழ்நிலையில், அரசின் அலட்சிய போக்கால் தான் விபத்து நடந்ததாக குற்றம் சாட்டிய அந்நாட்டு பொதுமக்கள், இறந்த அத்தனை உயிர்களுக்கும் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று அங்குள்ள தியாகிகள் சதுக்கத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை விரட்டுவதற்காக கூட்டத்தை கலைக்க காவல்துறையினர் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாக, கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அப்பகுதி தற்போது போர்க்களம் போல் காட்சி அளித்து வருகிறது. இது குறித்த புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன