சோமேட்டோ நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு 10 நாள் ஊதியத்துடன் விடுமுறை அளிக்கும் சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வீட்டிற்கு உணவு பொருட்களை டெலிவரி செய்யக்கூடிய பிரபலமான நிறுவனங்களில் சோமேட்டோ நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் தங்களது லாபம் மற்றும் வளர்ச்சிக்கு காரணமான வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அடிக்கடி வழங்கி மகிழ்ச்சிபடுத்தும். அதேபோல் அதில் பணிபுரியும் ஊழியர்களையும் மதிப்புடன் நடத்தும் சிறந்த நிறுவனமாகும். அந்த வகையில், சோமேட்டோ நிறுவனம் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், பெண்கள், திருநங்கைகளுக்கு ஆண்டுக்கு 10 நாட்கள் ஊதியத்துடன் மாதவிடாய் விடுமுறை அளிக்கப்படும் என நிறுவனத்தின் சிஇஓ தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார். மிகவும் சிரமமான மாதவிடாய் நேரத்தில் பெண்கள் தயங்காமல் விடுப்பை எடுக்கலாம் என்றும், இது குறித்து யாரேனும் எதிர்ப்பு தெரிவித்தால் துணிந்து அவர்கள் மீது புகார் அளிக்கலாம் என்றும் கூறியுள்ளார். இவரது இந்த நல்ல குணத்திற்கும் அவரது இந்த முடிவிற்கும் ஊழியர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன .