அப்பளம் சாப்பிட்டால் கொரோனா குணமடையும் என்று சொன்ன அமைச்சருக்கே தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. இதற்கிடையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக சில அரசியல்வாதிகளும், அமைச்சர்களும் வேடிக்கையான கருத்துக்களை கூற, அது சமூக வலைதளங்களிலும் வேடிக்கை விமர்சனங்களாக வைரலாகி வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் அப்பளம் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணம் அடையலாம் என சர்ச்சை கருத்தை வெளியிட்ட மத்திய அமைச்சர் அர்ஜுனுக்கு தற்போது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நான்காவது மத்திய அமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சமூக வலைதளத்தில் பலர் அமைச்சரே அப்பளம் சாப்பிட்டால் கொரோனா குணமடையுமே என்று வேடிக்கையாக பதிவிடுவதுடன், விரைவில் குணமடைந்து வருமாறு ஆறுதல் பதிவுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.