இந்தியாவில் சமீபத்தில் அதிகம் இணையதளத்தில் தேடப்பட்ட விவரங்கள் குறித்த பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது .
சமீபத்தில் கொரோனா காலகட்டத்தில் இந்தியாவில் அதிகம் விற்கப்பட்டவை, அதிகம் இணையதளத்தில் தேடப்பட்டவை என ஒவ்வொன்றின் பட்டியல் வெளியிடப்பட்டு அவை சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றனர். அந்த வகையில், இந்தியாவில் ஊரடங்கு காலத்தில் மக்கள் அதிகம் கூகுளில் தேடிய விஷயங்கள் ஒவ்வொரு மாதமும் அவ்வப்போது கூகுள் நிறுவனம் வெளியிட்டு வந்தது. அந்த வகையில்,
இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளில் கொரோனா என்ற வார்த்தை பதினைந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளில் முதலிடத்தில் கொரோனா என்ற வார்த்தை இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் ஜார்கண்ட்,பஞ்சாப்,கோவா ஆகிய மாநிலங்களில் மட்டும் கொரோனா குறித்து அதிகம் தேடப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கையில் இந்தியர்களுக்கு கொரோனா குறித்த பயம் விட்டுப் போயிருக்கலாம் கூகுள் தெரிவித்த தகவல்கள் வாயிலாக தெரிய வருகிறது.