Categories
தேசிய செய்திகள்

விமான விபத்தில் இறந்த கர்ப்பிணி மனைவி… வெளிநாட்டில் இருந்து விரைந்து வந்த கணவன்..!!

கேரள விமான விபத்தில் இறந்த கர்ப்பிணி மனைவியை பார்க்க துபாயிலிருந்து அவருடைய கணவன் திரும்பியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..

கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று துபாயிலிருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரண்டாக உடைந்து விபத்துக்குள்ளானதில், 19 பேர் பரிதாபமாக பலியாகிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் கோழிக்கோடை சேர்ந்த 25 வயதுடைய மனல் அகமது (Manal Ahmed) என்ற கர்ப்பிணி பெண் பலியாகியுள்ளார்..

முதலாம் ஆண்டு திருமண விழாவை வெகு சிறப்பாக கொண்டாட இன்னும் 10 நாட்களுக்கும் குறைவாக இருந்த சூழலில், அந்த பெண் பரிதாபமாக இறந்தார்.. இவர் சுற்றுலா விசா மூலம் தன்னுடைய கணவரைப் பார்க்க துபாய்  சென்றுள்ளார்.. அந்த விசா காலாவதியான நிலையில், கேரளா திரும்பும் போது, இந்த துயர சம்பவம் நிகழ்ந்து விட்டது.

இதனால் அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவும், இறுதி சடங்குகள் உள்ளிட்டவைகளில்  கலந்து கொள்வதற்காவும் அவரின் கணவர் அதிஃப் முஹம்மது (Athif Muhammed) இந்தியா திரும்பியுள்ளார்.

இந்த சோக சம்பவம் குறித்து அதிஃப் முஹம்மதுவின் தந்தை இஸ்மாயில் (Ismail) கூறுகையில், இது எங்களது குடும்பத்திற்கு ஒரு கடினமான கட்டம்.. முதலில் அவரின் மரண செய்தியை அறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தோம்.

இருப்பினும் மரணம் பற்றி எந்த ஒரு நம்பகமான தகவல் வராத காரணத்தால், சற்று தைரியமுடன் இருந்தோம். கடவுளிடம் ஏதும் நிகழக்கூடாது என்று பிரார்த்தனை செய்தோம். ஏனெனில் பலர் உயிருடன் மீட்கப்பட்டு வருவதாக செய்தி வெளியாகியதால், அவர் கண்டிப்பாக உயிர் பிழைத்திருப்பார் என்று தான் நினைத்தோம்.. அவர் நன்கு படித்ததுடன், இலட்சியம் கொண்ட பெண்ணாகவும் இருந்தார். கடந்த மார்ச் மாதம் ஒரு விபத்தில் அவர் தன்னுடைய தந்தையை இழந்துவிட்டார்.

இந்த தம்பதிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தான் திருமணம் நடைபெற்றது, அதிஃப் அண்மையில் துபாயில் கணக்காளராக பணியாற்றிய பின்னர் அஜ்மானுக்கு குடிபெயர்ந்தார். பிப்ரவரி மாதம் அவரது மனைவி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்ததாக அங்கிருக்கின்ற உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

Categories

Tech |