Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஆசையாய் வளர்த்த பூனை… கல்லால் அடித்துக் கொன்ற நபர்… மிருகவதை சட்டத்தின் கீழ் கைது…!!

வீட்டில் வளர்த்து வந்த பூனையை கல்லால் அடித்துக் கொன்றவரை மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சாக்கோட்டை நாச்சியார்கோவில் மெயின் ரோட்டில் குத்புதீன் மகன் பஷீர் அகமது என்பவர் வசித்து வருகிறார். இவர், ஆசையாக ஒரு வயதான பூனை ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்தப் பூனைக்கு  பசீர் அகமது, பட்டுக்குட்டி என்று பெயர் வைத்துள்ளர். அந்தப் பூனை காம்பவுண்ட் சுவற்றில் உட்கார்ந்திருந்த போது, அவ்வழியே சென்ற சுவாமிமலை அருகே இருக்கும் பட்டவர்த்தி மெயின் ரோடு தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் வீரமணி மதில் மேல் அமர்ந்திருந்த பூனையை கல்லால் அடித்துள்ளார்.

இதனால் பூனை தலை பகுதியில் பலமாக அடிபட்டு அந்த இடத்திலேயே உயிரிழந்தது. இதனை பார்த்த பசீர் அகமது, கல்லால் அடித்து பூனையைக் கொன்ற வீரமணி மீது நாச்சியார் கோவில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதன்பேரில் வீரமணியின் மீது மிருகவதைத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |