இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் கேரளாவில் நடக்கும் கோர சம்பவங்கள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாகவே கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி வெள்ளம் வீடுகளில் புகுந்துள்ளது. கேரளாவிலுள்ள மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 தமிழர்கள் உட்பட 78 பேர் உயிரிழந்துள்ளனர். மண்ணில் புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்தநிலையில் நேற்று கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதிக்கு துபாயிலிருந்து 197 பேருடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் போது இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் விமானி உட்பட 19 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கோழிக்கோடு மட்டும் மலப்புரம் நகர மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Prayers for the families who have lost their loved ones ..this too shall pass ..#AirIndia
— A.R.Rahman (@arrahman) August 7, 2020
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், நேற்று இரவு நடைபெற்ற விமான விபத்து மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்விற்கு பிரதமர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இந்த விபத்து குறித்து இரங்கல் செய்தியை தனது ட்விட்டர் பதிவிட்டுள்ளார். அதில், “அன்பானவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்காக பிரார்த்திக்கிறேன். இதுவும் கடந்து போகும்” என பதிவிட்டுள்ளார்.