Categories
மாநில செய்திகள்

தொடர் உயிரிழப்பு….. தடை எப்போது….? ராமதாஸ் கேள்வி….!!

ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு தடை எப்போது என பாமக தலைவர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்தில் மத்திய அரசு சீன செயல்களான டிக் டாக், ஹலோ உள்ளிட்ட 59 செயலிகளை தடை செய்திருந்தது. இதற்கு இந்திய மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைப்போலவே மக்களை பொருளாதார ரீதியிலும், மன அளவிலும் மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் ஆன்லைன் விளையாட்டுகளை தடைசெய்யக்கோரி பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், பாமக தலைவர் ராமதாஸ் திருச்சியில் கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் பல்லாயிரக் கணக்கான ரூபாயை இழந்த ஆனந்த் என்ற காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது என ட்வீட் செய்துள்ளார். சூதாட்டங்களால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் நிலையில், அதற்கு காரணமான ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது எப்போது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories

Tech |