Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செல்போன் இல்லாததால் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை …!!

ஆன்லைனில் கல்வி கற்பதற்கு செல்போன் இல்லாத விரத்தியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை ராமாபுரம் ஏழுமலை நாயக்கர் தெருவைச் சேர்ந்த சின்னையன் என்பவரின் மகள் யாமினி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வந்தன. ஆனால் கொத்தனார் வேலை செய்யும் சின்னையன் வீட்டில், யாமினி படிப்பதற்கு செல்போன் வசதி இல்லை. இதனால் தனது சித்தியின் செல்போனில் யாமினி அவ்வப்போது வகுப்புகளை கவனித்து வந்தார்.

இன்நிலையில் அனைத்து வகுப்புகளையும் ஆன்லைனில் தவற விடாமல் படிப்பதற்கு தனியாக செல்போன் வாங்கித் தருமாறு யாமினி அன்னையிடம் கேட்டுள்ளார். ஆனால் செல்போன் வாங்கி தராததால் மனம்முடைத்த யாமினி குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரயைலான் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைனில் கல்வி கற்பதற்கு செல்போன் இல்லாத விரத்தியில் ஏழை வீட்டு மாணவி தற்கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |