Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தொடர் மழையால் ரப்பர் பால் வடிக்கும் தொழில் பாதிப்பு …!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் ரப்பர் பால் வடிக்கும் தொழில் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கால் பல மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பால் வடிக்கும் தொழில் மூன்றாம் கட்ட ஊரடங்கின் போது கொடுக்கப்பட்ட தளர்வுகளால் 50 சதவீதம் பணியாளர்களுடன் மீண்டும் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தின் மலையோரப் பகுதிகளான கோதை ஆறு, குற்றியாறு, கீரிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ரப்பர் பால் வடிக்கும் தொழில் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பலகோடி ரூபாய் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |