2012ஆம் வருடம் நடந்த நிர்பயா சம்பவம் போன்று தற்போது 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2012 ஆம் ஆண்டு நிர்பயா பாலியல் வன்முறை மற்றும் கொலை குற்றத்திற்கு பிறகு தற்போது டெல்லியில் 12 வயது சிறுமி தனக்கு நடக்க இருந்த பாலியல் பலாத்காரத்தை எதிர்த்ததை தொடர்ந்து அதேபோன்று கொடுமைக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது நாட்டின் தலைநகரான டெல்லிக்கு மீண்டுமொரு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
பாசிம் விஹாரின் பீரா காரி பகுதியில் கடந்த வியாழனன்று இத்தகைய கொடூரமான சம்பவம் நடந்து பாலியல் பலாத்கார முயற்சியில் 12 வயதேயான சிறுமி பலமுறை கத்தரிக்கோலால் குத்த பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்ப ஆதாரங்கள் மேற்கோள் காட்டப்பட்டு சிறுமியின் உடல் பாகங்கள் மற்றும் குடல்களில் பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதாக அறிக்கைகள் கூறப்பட்டிருந்தது.
அதோடு சிறுமியின் இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. புதுடெல்லியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுமி தற்போது உயிருக்கு போராடி வருகின்றார். வீட்டில் தனியாக சிறுமி இருந்தபோது நடந்த இச்சம்பவத்தில் வியாழன் அன்று மாலை காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவரின் உடலில் கீறல்கள் இருந்ததால் சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாகாமல் இருக்க எதிர்த்துப் போராடியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதோடு கைது செய்யப்பட்டவர் போதைக்கு அடிமையானவர் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பல குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று வந்த அவர் சமீபத்தில் தான் ஜாமினில் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். அதோடு சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த காவல்துறையினர் சுமார் 100 நபர்களிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.