புளியம்பட்டியில் இருந்து சத்தியமங்கலத்திற்கு வாழைக்காய் வாங்க சென்ற லாரி உரிமையாளரிடமிருந்து தேர்தல் பறக்கும் படையினர் 77 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் இந்த தேர்தலில் பணப்பட்டுவாடா நடந்துவிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் தமிழகம் முழுவதும் பறக்கும் படையினரை சோதனையில் ஈடுபடச் செய்துள்ளது
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள நெடுஞ்சாலை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக வந்து சென்ற வாகனங்களை சோதனை செய்தபோது புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த சின்னராஜ் என்பவர் புளியம்பட்டியில் இருந்து சத்தியமங்கலத்திற்கு அந்தியூர் வழியாக சென்றுகொண்டு இருந்தார் அவரிடம் இருந்து காவல் துறையினர் ரூபாய் 77 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்
இதனையடுத்து சத்யமங்களத்தில் வாழைக்காய் வாங்குவதற்க்காக 77 ஆயிரம் கொண்டு செல்வதாக தெரிவித்தார்.
அவர் கொண்டு சென்ற பணத்திற்கு முறையான ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்தனர் இதனையடுத்து அந்தியூர் தாசில்தாரிடம் ரூ. 77 ஆயிரம் தொகையை தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்