Categories
சென்னை மாவட்ட செய்திகள் வானிலை

3 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் அதிக மழை பெய்ய வாய்ப்பு …!!

கோவை, நீலகிரி, தேனி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை படி அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்யும். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யக்கூடும்.

குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை நாளை நள்ளிரவு வரை 4.2 மீட்டர் உயரம் வரை ராட்சத அலைகள் எழும்பக்கூடும். மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Categories

Tech |