இட்லி இரண்டு மடங்கு சத்துக்கள் நிறைந்த ஒரு சிறந்த உணவு என ஆய்வு ஒன்றில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
வீட்டில் தினமும் காலையில் இட்லி செய்தால் அதை தவறாமல் சாப்பிட வேண்டும். தமிழர்களின் பண்பாட்டு உணவான இட்லி யானது ஒரு நாள் முன்பே, அரிசி, உளுந்து இவற்றை ஊறவைத்து அரைத்து, புளிக்கச் செய்து அதன் பின் வேகவைத்து சாப்பிடும் பொழுது, நமக்கு கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் அதிகமாக கிடைக்கிறது. மேலும் இந்த இட்லியில் நார்ச்சத்து அதிகமாகவும் குளூட்டன் இல்லாமலும் இருக்கிறது. வேகவைக்கும் முறையில் சமைக்கப்படும் இட்லியில் கொழுப்புகள் எதுவும் இருக்காது. இதனால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேர்வதைத் தடுத்து விடலாம். மேலும் அரிசியில் இட்லி செய்வது பிடிக்காதவர்கள் கோதுமை மாவில் இட்லி செய்து சாப்பிடலாம். இது செரிமானத்திற்கும் நீரிழிவு நோய்களுக்கும் சிறந்ததாக அமையும்.
உயிரை காவு வாங்கும் ரெடிமேட் மாவு:
1. காலை உணவுக்கு சிறந்த உணவு இட்லிதான் என உலக ஆராய்ச்சியாளர்களால் கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்பொழுது இட்லி உயிரை பறிக்கும் உணவாக மாறிவிட்டது.
2. இன்றைய காலகட்டத்தில் நேரமில்லை, சோம்பேறித்தனம் போன்ற காரணங்களால் இட்லி தோசைக்கு பயன்படுத்தும் இன்ஸ்டன்ட் இட்லி மாவை பயன்படுத்தி நம்முடைய ஆரோக்கியம் கெடுவதற்கு நாமே காரணமாகி விடுகின்றோம்.
3. இதற்கு முன், ஆட்டுக்கல்லில் மாவு அரைத்து சாப்பிடும் பழக்கம் இருந்தது. ஆனால் தற்போது ஆட்டுக்கல் என்பது வீட்டில் ஒரு காட்சிப் பொருளாக மாறிவிட்டது.
5. அந்த காலத்தில் ஆட்டுக்கல்லை சுத்தமாக கழுவி மாவு அரைத்து நொதிக்கச் செய்வார்கள். ஆனால் தற்பொழுது கடைகளில் விற்கப்படும் மாவை ஆட்டுவதற்காக அவர்கள் பெரிய கிரைண்டர்களை உபயோகிக்கின்றனர். அதை சுத்தமாக வைத்து, பயன்படுத்துவார்களா? என்பது நமக்கு தெரியாது.
5. மாவு ஆட்டும் பொழுதும், ஆட்டுக்கல்லை கழுவிகின்ற பொழுதும் சுத்தமான நீர் கொண்டு கழுவ வேண்டும். இல்லை என்றால் ஈகோலி என்னும் பாக்டீரியா தாக்கம் அதிகமாக ஏற்படும்.
உடல் நல குறைபாடுகள்:
1. ஈகோலி பாக்டீரியா மூலம் நாள்பட்ட வயிற்று வலி, உடல் வறட்சி, வாந்தி, மயக்கம், இரப்பை நோய், தலை சுற்றல் போன்ற அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
2. வெளியில் உள்ள கடைகளில் வாங்குகின்ற இட்லி மாவில் ஈகோலி என்னும் பாக்டீரியா அதிகமாக இருக்கிறது. நீங்கள் என்னதான் வேகவைத்து சாப்பிட்டாலும் அது முழுமையாக அழிவதில்லை என்பது தான் இதிலுள்ள சோகமான விஷயம். இதனால் உடல்நலம் மோசமடையும் வாய்ப்பு அதிகம் உள்ளது.