பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய்யின் இளம்பருவ கதாபாத்திரத்தில் பேபி சாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமான கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் பல வருடமாக படமாக்க முயற்சி செய்து தற்போது அதை இயக்கி வருகிறார். லைக்கா நிறுவனமும் மணிரத்னமும் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகின்றனர். நடிகர் விக்ரம், ஜெயம் ரவி, பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ராய் லட்சுமி போன்ற பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். இரண்டு பாகங்களாக தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் பேபி சாரா பொன்னியின் செல்வன் படத்தில் தற்போது இணைந்துள்ளார். இவர் ஏ.எல் விஜய் இயக்கி, நடிகர் விக்ரம் நடித்த தெய்வமகள் படத்தில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஐஸ்வர்யா ராயின் இளம்பருவத்தில் பேபி சாரா பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இவர் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் வருவார் என கூறப்படுகிறது. ஹைதராபாத்தின் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் இதற்கான சூட்டிங் நடைபெற உள்ளது.