பழனி அருகே குழந்தைக்கு தாலாட்டு பாடி மன்சூர் அலிகான் வாக்கு சேகர்த்தது தற்பொழுது பரவலாக பேசப்பட்டு வருகிறது
மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டதை அடுத்து போட்டியிட உள்ள அனைத்து கட்சிகளும் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
திண்டுக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிட உள்ள நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நடிகர் மன்சூர்அலிகான் அவர்கள் வித்தியாசமான முறையில் தேர்தல் பிரச்சாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் மசாலா அரைப்பது, இளநீர் வெட்டுவது, தேநீர் விற்பது, மீன் விற்பது, காய்கறி விற்பது மற்றும் துப்புரவு பணியாளர் வேலை செய்வது என வித்தியாசமான முறையில் மக்களிடையே பிரச்சாரம் செய்து வருகிறார்
இந்நிலையில் பழனிக்கு சென்ற இவர் பாப்பம்பட்டி பகுதியில் மக்களிடையே வாக்கு சேகரித்து வந்தார். அப்போது வயல்வெளிகளில் வேலை பார்த்த பெண்கள் அங்கே உள்ள மரங்களில் தொட்டில் கட்டி தங்களது குழந்தைகளை தூங்க வைத்திருந்தனர்
அதன் பின் தொட்டிலில் இருந்த குழந்தாய் ஒன்றிற்கு மன்சூர்அலிகான் தாலாட்டு பாடி தூங்க வைத்தார் அப்போது வயலில் வேலை செய்து கொண்டு இருந்த பெண்கள் மன்சூர்அலிகானை பார்த்ததும் ஓடிவந்தனர்.
அதன்பின் அவரை காண வந்த பெண்களிடமும் வேலையாட்களிடமும் கரும்பு விவசாயி சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுமாறு வேண்டுகோளை முன் வைத்து வாக்கு சேகரித்தார்