Categories
உலக செய்திகள்

சீனா செய்த செயலால் அணுகுமுறை மாறிவிட்டது… அதிபர் டிரம்ப் பேச்சு…!!!

கொரோனாவிற்கு பின்னர் சீனாவின் மீதுள்ள அமெரிக்காவின் அணுகுமுறை முழுவதுமாக மாறிவிட்டது என்று அமெரிக்க அதிபர் கூறியுள்ளார்.

உலகில் உள்ள நாடுகளில் பெரிய பொருளாதார நாடுகளாக அமெரிக்காவும் சீனாவும் இருந்து வருகின்றன. சில நாட்களாகவே இருநாடுகளும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வர்த்தக உறவில் தொடங்கி  தென்சீனக்கடல் விவகாரம், உய்கூர் இன முஸ்லிம்கள் மீது சீன அரசின் அடக்குமுறை, ஹாங்காங்கின் ஜனநாயகத்தை பறிக்கக்கூடிய செயல்பாடுகள் வரை பல்வேறு பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த விவகாரங்கள் அனைத்தும் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவை மிகவும் பலவீனமாக்கியுள்ளது. இதற்கு இடையில் கொரோனா வைரஸின் தாக்கம் பெரும் பகையை உண்டாக்கியுள்ளது.

சீனா ஆய்வகத்தில்  கொரோனா வைரஸை உருவாக்கி, அதனை வேண்டுமென்றே சீனா அனைத்து நாடுகளுக்கும் பரப்பி உள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டி கொண்டிருக்கிறது. இந்நிலையில் கொரோனாவிற்கு பின்னர் சீனாவின் மீதுள்ள அமெரிக்காவின் அணுகுமுறை முழுவதும் மாறிவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “கொரோனா  தாக்கம் தொடங்கியதிலிருந்து சீனா மீதான நமது அணுகுமுறை பெரிதும் மாறிவிட்டது என்று நான் கருதுகிறேன். கொரோனாவை அவர்களால் கட்டாயம் தடுத்திருக்க இயலும். இருந்தாலும் அவர்கள் அதனை செய்யவில்லை. அதனால் நாங்கள் வித்தியாசமாக உணர்கிறோம்”என்று கூறியுள்ளார்.

Categories

Tech |