Categories
தேசிய செய்திகள்

பெண் மருத்துவருக்கு எச்சில் துப்பு… புதிய நோயாளிகளை சேர்த்ததால் ஆவேசம்…!!

புதிய நோயாளிகளை வார்டில் அனுமதிக்க மறுப்பு தெரிவித்த நோயாளிகள் பெண் மருத்துவர் மீது எச்சில் துப்பிய சம்பவம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

உலகம் முழுவதும் அதிவேகத்துடன் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு திரிபுராவையும் அச்சுறுத்தி வருகிறது. திரிபுரா மேற்கு மாவட்ட கொரோனா கண்காணிப்பு அதிகாரி மருத்துவர் சங்கீதா சக்கரவர்த்தி ஆவார். இவர் பகத்சிங் இளைஞர் விடுதியில் உள்ள கொரோனா நிலையத்திற்கு  புதிதாக பிறந்த குழந்தைகளுடன் வந்த ஐந்து பெண்களை அனுமதிக்க சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த கொரோனா நோயாளிகள் அவர்களை தடுத்து நிறுத்தி புதிய நோயாளிகள் யாரையும் சேர்க்க கூடாது என கூறினர். மேலும் இந்த மையத்தில் அதிக அளவில் நோயாளிகள் நிரம்பி உள்ளதாகவும் கூறி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த நோயாளிகளிடம் சமாதானம் பேசுவதற்கு அந்த மையத்தில் இருந்த மருத்துவர்கள் முயற்சி செய்தபோது தேவையில்லாத வார்த்தைகள் பேசியதோடு மட்டுமல்லாமல் பெண் மருத்துவர் சக்கரவர்த்தி மீது கொரோனா நோயாளிகள் எச்சிலை துப்பி உள்ளனர். அதுமட்டுமில்லாமல்,  “கொரோனா வைரஸை உங்கள் மீது பரப்பி விடுவோம்” என்று மிரட்டல் விடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து கொரோனா நோயாளிகள் 4 பேர் மீதும் காவல்துறையினர் எப்ஐஆர் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அதன் பின் மாஜிஸ்திரேட் நீதிபதி சஞ்சய் திரிபுரா இந்த வழக்கைை விசாரித்து, குற்றம் சுமத்தப்பட்ட வர்களுக்கு 30,000 ரூபாய் அபராதத்துடன் கூடிய ஜாமின் வழங்கினார்.  இந்தத் தொகைக்கு நிகராக உள்ள மற்றொரு தொகையை வருகின்ற பத்தாம் தேதிக்குள் கட்ட வேண்டும் என்றும் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்து செயல்பட வேண்டும் எனவும் கூறி நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கப்பட்டது. அதன்பின் இந்த வழக்கை  ஐகோர்ட் நீதிபதிகள் ரத்து செய்து உத்தரவிட்டனர். அதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கொரோனா நோயாளிகள் நான்கு பேரும் போலீசில் சரணடைந்துள்ளனர்.

Categories

Tech |