கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர். முன்னெச்சரிக்கையாக 2000க்கும் அதிகமானோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலியர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். கோழிக்கோடு, வயநாடு மற்றும் மலப்புறம் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. திருச்சூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றின் காரணமாக மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்தன. பல பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் வயநாடு, இடுக்கி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, பாலக்காடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் நாளை மறுநாள் வரை ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.