Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…நிதானம் தேவை…திறமை வெளிப்படும்…!

தனுசு ராசி அன்பர்களே …!   இன்று எல்லா வளமும் பொங்கி பெருகும். பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது மட்டும் கண்டிப்பாக வேண்டும். பிறர் குறை கூற வண்ணம் தங்கள் மரியாதையை காத்துக் கொள்ள வேண்டும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். குடும்பத்தாரின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வீர்கள். ஓரளவு திறமை வெளிப்படும் நாளாக இருக்கும். வெற்றி பெறக்கூடிய தேவையான அனைத்து விஷயங்களும் நடக்கும். புதிய முயற்சிகளை மட்டும் தயவு செய்து தள்ளிப்போடுங்கள்.

காரியத்தடை தாமதம் கொஞ்சம் இருக்கும். எதையும் புத்தி சாதுர்யத்துடன் கையாளுவதால் லாபகரமான காலமாக இன்றைய நாளை மாற்றியமைத்துக் கொள்வீர்கள். அதேபோல் கணவன் மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். இருவரும் எதையும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். நிதானம் இருந்தால் இன்றைய நாள் மிக சிறப்பான நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்னையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும்.

மாலை நேரங்களில் நடைபயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ஒரு ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |