சீனாவுடன் தொடர்புடைய 2500 யூட்யூப் சேனல்களை நீக்கியுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது .
சீன நாட்டிலிருந்து கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ தொடங்கியதை அடுத்து உலக நாடுகள் அனைத்தும் சீன நாட்டிற்கு எதிராக தங்களது அதிருப்தியான கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இது போன்ற செயல்கள் அந்நாட்டின் அரசுக்கு நெருக்கடி கொடுப்பதை காட்டிலும், அந்நாட்டில் உள்ள மக்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில்,
சமீபத்தில் உலக மக்கள் மூலம் சீனாவில் இருந்து கொண்டு பல கோடி வருவாய்களை ஈட்டி வந்த TIKTOK செயலிக்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் இருப்பதிலேயே TIKTOK நிறுவனத்திற்கு மிக அதிகமாக வருவாய் தந்து கொண்டிருந்த இந்தியாவில் அந்த செயலி தடை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் தடை செய்வதற்கான முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சீனாவுடன் தொடர்புடைய தவறான தகவல்களை பரப்பும் வகையில் செயல்பட்ட 2500க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் நீக்கியுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவில் உள்ள சீன தூதரகம் இதற்கு எவ்வித கருத்தையும் இதுவரை வெளியிடவில்லை. நீக்கப்பட்ட பெரும்பான்மையான சேனல் தேவையற்ற அல்லது அரசியல் சார்ந்த உள்ளடக்கங்களை கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.