சென்னையில் 140 டன் அம்மோனியம் நைட்ரேட்டை ஏலம்விட சுங்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு லெபனானில் பயங்கர வெடி விபத்து நிகழ்ந்தது. ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்த இந்த விபத்தில், பலர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் பேசப்பட்ட இந்த வெடிவிபத்து அமோனியம் நைட்ரேட் உள்ளிட்ட வேதிப் பொருட்களை பதுக்கி வைத்தால் ஏற்பட்ட விளைவு என்ற கருத்துக்கள் வெளியே கசிந்து வந்தன.
இந்நிலையில் சென்னையில் கடந்த 2015 ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டு மணலி குடோனில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள 140 டன் அமோனியம் நைட்ரேட்டை உடனே ஏலம் விட சுங்கத்துறை முடிவு செய்து உள்ளது. தற்போது வரை பாதுகாப்பாக இருந்தாலும், சிறிய அதிர்வு ஏற்பட்டாலும் வெடித்து சிதறும் அபாயம் உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. லெபனானில் வெடி விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.