நடிகர் சூர்யா “காட்டு பயலே” பாடலுக்கு கிடைத்த வெற்றிக்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசை பாராட்டியுள்ளார்.
நடிகர் சூர்யா நடித்து சுதா கொங்காரா இயக்கத்தில் உருவான படம் ‘சூரரைப் போற்று’. ஏர்டெக்கான் நிறுவனர் ஜி. ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து மோகன் பாபு, அபர்ணா பாலமுரளி, ஜாக்கி ஷெராஃப், பரேஷ் ராவல், ஊர்வசி, கருணாஸ் போன்ற பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். இப்படத்தில் ‘மாறா தீம்’, ‘வெய்யோன் சில்லி’, ‘காட்டு பயலே’ உள்ளிட்ட நான்கு பாடல்கள் யூடியூப் தளத்தில் வெளியானது. ஜூலை23 சூர்யா பிறந்தநாள் என்று ‘காட்டு பையிலே’ பாடலின் ஒரு நிமிட வீடியோ வெளியிடப்பட்டது.
அதைத்தொடர்ந்து ஜூலை 24ஆம் தேதி இப்பாடலின் லிரிகல் வீடியோ வெளியானது. யூட்யூப் தளத்தில் கடந்த வாரத்துக்கான இந்திய அளவில் சிறந்த 100 பாடல்களின் பட்டியலில் 28 வது இடத்தை இப்பாடல் பிடித்துள்ளது. ஜி.வி பிரகாஷ் இதற்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அவரை பாராட்டும் வகையில் நடிகர் சூர்யா “ஒவ்வொரு முறையும் உங்களை நீங்களே புதுப்பித்துக் கொள்வது முற்றிலும் ஊக்கப்படுத்துவதாக உள்ளது. சூரரைப் போற்று படத்தை மேலும் விசேஷமாக மாற்றியதற்கு நன்றி” என தெரிவித்துள்ளார். இதர மூன்று பாடல்களையும் ஊரடங்கு முடிந்தவுடன் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து படம் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.